சிறிநகர் தொடருந்து நிலையம்
சிறிநகர் தொடருந்து நிலையம், இந்தியாவின் சம்மு காசுமீர் யின் தலைநகரான சிறிநகரில் அமைந்துள்ளது. இது ஜம்மு-பாரமுல்லா செல்லும் ஒற்றை அகல இருப்புப் பாதையில் உள்ளது. ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் அமைந்த இத்தொடருந்து நிலையம் இது மூன்று நடைமேடைகள் கொண்டது. இந்த இருப்புப் பாதை முற்றிலும் மின்சாரமயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையம் தால் ஏரி அருகே உள்ள லால் சௌக்கிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகு சிறிநகர் தொடருந்து நிலையம், ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களுடன் இணைக்கப்படும்.
Read article